Wednesday, February 17, 2010

தமிழில் மீண்டும் அசின்: 4 படங்களில் நடிக்கிறார்

சென்னை, பிப். 17-
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கடைசியாக நடித்த படம் “தசாவதாரம்” 2007-ல் ரிலீசானது. அதற்கு முன் “எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி”, “கஜினி”, “வரலாறு”, “போக்கிரி”, “சிவகாசி” உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
2008-ல் கஜினியை இந்தியில் ரீமேக் செய்தனர். அதில் அமீர்கான் ஜோடியாக நடித்து இந்தி திரையுலகில் நுழைந்தார். அப்படம் வெற்றி அடைந்ததால் அசின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். “லண்டன் டிரீம்ஸ்” படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளை உதறினார். ஆனால் “லண்டன் டிரீம்ஸ்” வெற்றி பெறாததால் அசின் மார்க்கெட் கவிழ்ந்தது. தற்போது மீண்டும் தமிழ் படங்களுக்கு வருகிறார்.
மலையாளத்தில் ஹிட்டான “பாடி கார்ட்” படம் விஜய் நடிக்க தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக அசின் நடிக்கிறார். மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது.
சூர்யாவை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்துக்கும் அசினை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடக்கின்றன. விஜய்யை வைத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவும் அசினிடம் பேசி வருகின்றனர். சிம்புவும் அசினை சந்தித்து தனது “வாலிபன்” படத்தில் நடிக்க அழைத்துள்ளாராம். தமிழில் 4 புதுப்படங்கள் அசினுக்கு வந்துள்ளன.

No comments:

Post a Comment