புதன்கிழமை, பெப்ரவரி 17, 11:10 AM IST

“3 இடியட்ஸ்” படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம்சர்க்கியூட் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.
இப்படத்தில் நடிக்க முன்னணி தமிழ் ஹீரோக்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். பாலாவின் “அவன் இவன்” படத்தில் விஷால், ஆர்யா என இரு கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.
அதுபோல் “3 இடியட்ஸ்” ரீமேக்கிலும் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க பலர் விரும்புகிறார்கள்.
அமீர்கான் வேடத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற இரு ஹீரோக்கள் மற்றும் கதாநாயகி பரிசீலனையில் உள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment