Sunday, February 14, 2010

விஐய் நடிக்கும் சுறா 50வது படம் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது

சென்னை: விஜய் நடிக்கும் ‘சுறா’ படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. விஜய் நடித்து, சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம் ‘வேட்டைக்காரன்’. மெகா ஹிட்டான இந்தப் படத்தை அடுத்து, விஜய் நடிக்கும் 50வது படம் ‘சுறா’. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். எஸ்.பி.ராஜகுமார் இயக்கி வருகிறார்.

‘இயற்கை’, ‘கந்தசாமி’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். மணிசர்மா இசை அமைக்கிறார். தெலுங்கில் ஹிட்டான ‘மகதீரா’ படத்தின் வில்லன், தேவ் கில் இந்தப்படம் மூலம், தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். ஆக்ஷன் படமான இதில், சண்டைக் காட்சிகளில் விஜய் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். வடிவேலுவுடன் இணைந்து காமெடியிலும் விஜய் கலக்கியுள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன.

பாண்டிச்சேரி அருகே இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து தூத்துக்குடியில் சண்டைக்காட்சி படமாக்கப்பட இருக்கிறது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாகிறது. இதுவரை இல்லாத அளவு, விஜய் படங்களிலேயே அதிக பிரமாண்டமாக இப்படம் தயாரிக்கப்படுகிறது. ஏப்ரலில் சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

No comments:

Post a Comment